தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.4.12

சிறுவன் தில்ஷன் கொலை:இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை


சென்னையில் கடந்த ஆண்டு 2011 ஜூலை 3 ம்தேதி சிறுவன் இராணுவக் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் சிறுவனைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், குடியிருப்பின் அருகில் உள்ள இராணுவ க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள இராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான்.இந்தச்
சம்பவம்  இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை காவலர்கள் 12 தனிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் மாங்காய் பறிப்பது , கல்வீசுவது என்ற பிரச்னையால் ராமராஜன் எரிச்சல் அடைந்து சுட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. சிறுவனை சுட்ட துப்பாக்கி தீயணைப்பு படையினர் உதவியுடன் அருகில் உள்ள கூவத்தில் இருந்து மீட்கப்பட்டது. கொலை குற்றம், சட்ட விரோதமாக ஆயுதங்கள் பயன்படுத்தியது. தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அந்த அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.  விசாரணை துவங்கி 7 மாதத்தில் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

நீண்ட விசாரணைக்கு பின்னர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சிறுவனைச் சுட்டதாகத் தெரியவந்தது. இந்த வழக்கில்  அந்த முன்னாள் அதிகாரி ராமராஜூவிற்கு ஆயுள் தண்டனையும், 60 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ரூ. 50 ஆயிரத்தை சிறுவனின் தாயாரிடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பைக் கேட்ட ராம ராஜூ இது பொய் வழக்கு என்றும் தனக்கு மேல் முறையீடு செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கண்கலங்கியபடி கூறினார்.

0 கருத்துகள்: