தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.4.12

போராளிகளின் உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்கள் வெளியாகின


வாஷிங்டன்:ஆப்கான் போராளிகளின் இறந்த உடல்களை அவமதிக்கும் விதமாக உடல் பாகங்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் 2010-ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது. ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கண்டனம் தெரிவித்தார். கடுமையான ஒழுங்கீனங்களை ராணுவத்தினர் செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானில் இறந்த உடல்களை அவமதிக்கும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் வெளியாகியுள்ளன. நேட்டோ ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் கொலைச் செய்யப்பட்டவர்களின் இறந்த உடல்களுக்கு அருகே சிறுநீர் கழிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன் பிறகு மீண்டும் அதேப் போன்றதொரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கான்-நேட்டோ உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இறந்த உடல்களை அவமதிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: