தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.12

அமெரிக்காவிடம் நவீன ரக குண்டுகளை கேட்கிறது இஸ்ரேல்


ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க அமெரிக்காவிட ம் அதிநவீன குண்டுகள் மற்றும் விமானங்களை இ ஸ்ரேல் கேட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியா கி இருக்கிறது.ஈரானின் அணுசக்தி உலை பிரச்சி னை இஸ்ரேல் நாட்டை அச்சத்தில் ஆழ்த்தி வருகி றது. இதனால்
இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை அ திகரிக்கும் நடவடிக்கையில்
தீவிரமாக இறங்கி வருகிறது. சமீபத்தில் இஸ்ரே லிய பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஒபா மாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் ஈரான் பிரச்சினை முக்கிய இடம் பெற்றது. ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது என்று இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் ஒபாமாவோ முதலில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி அது முடியாத பட்சத்தில் அடுத்த கட்ட யோசனை எடுக்கலாம் என்று கூறி விட்டார். மேலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் அவர் 2012-ம் ஆண்டில் ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்பவில்லை.
இந்த சந்திப்பின் போது ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் அதிநவீன பங்கர்-பூஸ்டர் குண்டுகளையும், எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் தரும்படி இஸ்ரேல் வலியுறுத்தியது. இதை இஸ்ரேலிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அந்த அதிகாரி கூறுகையில், 'அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த போது எங்கள் பிரதமர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்' என்றார். ராணுவ ஆயுதங்களை பெறுவதற்கு ஈரான் மீது இந்த ஆண்டில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்கா நிபந்தனை விதிக்கவில்லை. இவ்வாறு வெளியான தகவலில் உண்மை எதுவும் கிடையாது என்றும் அவர் விளக்கினார்.
ஆனால் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய் கார்னே இது பற்றி கருத்து கூறுகையில், அந்த சந்திப்பின் போது இது போன்ற எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்று கூறினார். அதிகாரிகள் மட்டத்திலும் பேசப்பட்டதாக தகவல் இல்லை என்றார்.
இதற்கிடையில் ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பென்சமின் பின்வாங்கி இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், 'ஈரான் மீது வரும் சில நாளில் அல்லது வாரத்தில் தாக்குதல் என்பது இல்லை. ஆனால் ஆண்டுக்கணக்கில் அது தள்ளிப்போகாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ஈரான் அணு குண்டு தயாரிப்பை நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்பட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஐ.நா. சபையின் நிபுணர் குழுவினர் தங்கள் கைகளை கட்டிப் போட ஈரான் முயற்சிக்க கூடாது என்றும், எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
பூமிக்குள் 65 மீட்டர் ஆழத்திற்கு கான்கிரீட் கட்டிடத்தையும் துளைத்து சென்று தாக்கும் வலிமை பெற்ற அதிநவீன குண்டை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தது. சுமார் 13,600 கிலோ எடையுள்ள இந்த பங்கர் குண்டுகளை தயாரித்து தயார் நிலையில் வைத்து இருப்பதாக அமெரிக்க விமானப்படை தளபதி ஹெர்பெர்ட் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: