தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.12

அமெரிக்காவின் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல : எலின் சாம்பர்லெய்ன்

சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக ள் பேரவையில் சமர்பிக்கும் தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கத்தில் அமைந்ததல்ல என ஜெனிவா வுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன்டொ னகேஹோ (Eileen Chamberlain Donahoe) குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தனது உரையில் மேலும்
குறிப்பிடுகையில் , சிறிலங்கா அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பல்வேறு பரிந்துரைகளைச் செய்துள்ளது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது ஆயினும், சிறிலங்கா அரசானது இன்னமும் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய பொறுப்புமிக்கச் செயற்திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை.
இனங்களுக்கிடையிலான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான எந்தவொரு செயற்பாட்டினையும் சிறிலங்கா அரசு மேற்கொள்ளில்லை என்பதை அனைத்துலக மற்றும் உள்நாட்டு அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே, அமெரிக்க அரசின் உயர்மட்டங்களில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. அந்த பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் இந்தத் தீர்மானம் நியாயமற்றது எனக் கூறும் சிறிலங்காவின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது.
நீண்ட கால ஆயுதமோதல்களுக்குப் பின் தோன்றியுள்ள சூழ்நிலையில் அமைதியான தேசிய நல்லிணக்கத்தை இனங்களுக்கிடையில் சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும், தமிழ்மக்களை சிறிலங்காவின் தேசிய இனமாக வாழ்வதற்குரிய சூழலை, மீள் உருவாக்குவதற்கும், போர்க்கால நடவடிக்கைகள் குறித்து அரசு பொறுப்புரைப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்வது உலகிலுள்ள நாடுகளின் கடமையாக உள்ளது.
அந்த வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ள இத் தீர்மானம் குறித்து, சகல தரப்புக்களிலும், மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்தத் தீர்மானம் எழுதப்பட்ட தொடக்கநிலையில், நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு காலக்கெடுவும் முன்வைக்கப்படாத போதும், இந்த ஆண்டின் இறுதிவரை என யோசிக்கபட்ட காலக்கெடு, 2013ம் ஆண்டு இறுதியில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் 22வது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் பேரவைக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போரின் முடிவில் ஏற்பட்டுள்ள அமைதியையும், தேசிய நல்லிணக்கத்தையும், உறுதிப்படுத்த வேண்டியவற்றைச் செய்வதற்குரிய சிறிலங்காவிற்கான காலம் கடந்து கொண்டிருக்கிறது.ஆதலால் சிறிலங்காவில் இறுதியான அமைதியை கொண்டு வருவதற்கு, சர்வதேச சமூகம் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்ற முன் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: