தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.12

இந்திய மாநிலத்தி்ன் இளம் முதல்வர்

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தி ல் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல் வர் என்ற பெயரை தட்டி செல்கிறார் அகிலேஷ்சிங் யாத வ். இன்று காலையில் லக்னோவில் நடந்த சமாஜ்வாடி க ட்சியின் கூட்டத்தில் முலாயம்சிங் மகன் அகிலேஷ் சட்ட மன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரே  இம்மாநிலத்தின் முதல்வராக கட்சி
விரும்புவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கட்சியின் மூத்த உறுப்பினரான ஆஷாம்கான் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் கட்சி உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முலாயம்சிங்கும் பங்கேற்றார். இந்த முடிவை வரும் கவர்னரிடம் தெரிவிப்பார். இதனையடுத்து ஆட்சி அமைக்க அகிலேஷ்சுவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். தொடர்ந்து வரும் 15 ம் தேதி ( வியாழக்கிழமை ) அவர் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. ‌இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்லவிருக்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இம்மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெருவாரியான 226 தொகுதிகளை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்கிறது. சுறு, சுறுப்பு, சிரித்த முகம், ,: இந்த கட்சிக்கு தலைவர் பொறுப்பை உடல் நலம் காரணமாக மகனுக்கு கொடுத்து ஒதுங்கியே இருந்தார். தேர்தல் துவங்கியது முதல் முடியும் வரை அகிலேஷ்தான் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். இவரது கட்சி சின்னமான சைக்கிளில் பல இடங்களில் நடத்திய பேரணியில் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். நேதாஜி என்றழைக்கப்படும் முலாயம்சிங் மகன் என்ற பாசம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது . இதனை விட சுறு, சுறுப்பு, சிரித்த முகம், , தொண்டர்களிடம் நெருங்கி பழகுதல், மேடையில் இருந்தபடியே ஏழைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நலம் விசாரிப்பது என இவரது ஸ்டைல் மக்ககளை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். இதனால் அவருக்கான கவரேஜ்கள் பிரம்மாதமாக அமைந்திருக்கும். நடந்து முடிந்த தேர்தலில் ராகுலுக்கும், அகிலேசுக்கும் இடையே தான் போட்டி பிரசாரமாக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. அகிலேஷ் உழைப்புக்கு பயனாக தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு முழு சாதகமாக அமைந்தது. மாயாவதி கட்சி மண்ணை கவ்வியது. இளம் எம். எல்.ஏ.,க்கள் விருப்பம் நிறைவேறியது : தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் கூட அனைத்து மீடியாக்களும் முலாயம்சிங்கை விட மகன் அகிலேஷின் பேட்டிக்கே முக்கியத்துவம் அளித்தது. இந்நிலையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று லக்னோவில் நடந்தது. இதில் சட்டமன்ற தலைவராக அகிலேஷ்சிங் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக தந்தையும், மகனும் , யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் சற்று ஓப்பனாக பேசாமல் தந்தை , கட்சி முடிவு செய்யும் என்றும், முலாயம்சிங்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று மகனும் சொல்லி சஸ்பென்ஸ் வைத்தனர். அகிலேஷ் பொறுப்புக்கு வரட்டும், இது தான் சரியான தருணம் என்கின்றனர் இளைய தலைமுறையினர். இளம் எம்.எல்.ஏ.,க்களும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இது வரை இந்த இளம் வயதில் ( 38 வயது ) முதல்வர் பொறுப்பை இந்தியாவில் யாரும் ஏற்றதில்லை என்ற பெயரும், இளம் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு கிடைத்திருக்கிறது. சபாநாயகராக அஷாம்கான் தேர்வு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்: