அமெரிக்காவே செத்துத் தொலை.. ஒபாமாவே நீயும் கூ டவே செத்துத் தொலை என்று கோஷமிட்டபடி ஆப்கா ன் பல்கலைக்கழக இளைஞர்கள் 2000 பேர் ஜலலாபாத் தில் ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். அமெரிக்க சார் ஜன்ட் தர அதிகாரி ஒருவர் 16 ஆப்கான் பொது மக்களை வீடு புகுந்து சுட்டுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித் து இந்த ஆர்பாட்டங்களை நடாத்தியுள்ளார்கள். மேலும் அவர்கள் கூறும்போது வரும் 2014 ற்குப் பிறகும் அமெரி க்கப்படைகளும், இராணுவ ஆலோசகர்களும் ஆப்கானி ல் தங்குவதற்கான ஒப்பந்தத்தில்
அதிபர் ஹர்மீட் கார்சாய் கையெழுத்திடக் கூ டாது என்றும், குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக ஆப்கானிலேயே வி சாரணைகள் நடக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்கள்.அதேவேளை இந்த விவகாரத்தில் இன்று கருத்துரைத்த தாலிபான் அமைப்பு இஸ்லாமிய சட்டங்களின்படி அந்த இராணுவத்தினனுடைய கழுத்தை அறுக்க வேண்டுமென கோரியுள்ளது. மறுபுறம் மேற்கண்ட இராணுவ சார்ஜன்ட் அமெரிக்க சட்டங்களின்படி மரணதண்டனை பெறும் விளிம்பு நிலையில் நிற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இராணுவ சார்ஜன்ட் ஆப்கானுக்கு புதியவர் ஈராக்கில் இருந்து நேரடியாக ஆப்கான் வந்து சன்னதமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பெயரை வெளியிட அமெரிக்கா மறுத்துவிட்டது.ஆப்கான் விவகாரம் பற்றி இன்று கருத்துரைத்த அமெரிக்க அதிபர் வரும் 2014 ல் தமது படைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது என்று தெரிவித்தார். அவசரப்பட்டு படைகளை அப்புறப்படுத்திவிட்டு பின்னர் பிரச்சனை அடிதலையாக மாறினால் இன்னொரு தடவை இராணுவத்துடன் ஓடிப்போய் ஆப்கானில் நின்று மறுபடியும் முதலில் இருந்து தொடங்க முடியாது. போய் விட்டோம் அங்கு பெறுமதியான மாற்றத்தை உருவாக்கிவிட்டு திரும்புவதே இனி தமக்கு அழகு என்று தெரிவித்தார். அதேவேளை நாட்டுக்கு நாடு மன்னிப்புக் கேட்டு அலையும் ஒபாமாவை றொம்னி தோற்கடிப்பார் வரும் தேர்தலில் என்று இன்றைய கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஒபாமாவின் மென்மைப் போக்கு அவரை தூக்கி வீசக்கூடிய அபாயம் உள்ளது. எனறு புழுகுனி பத்திரிக்கைகல் புளுகி வருகினறன,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக