தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.3.12

சிரியாவில் 47 அப்பாவிகள் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்தது ராணுவமா? போராளிகளா?


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில் அரபுநாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன் டமாஸ்கஸ் சென்றார். அரசுடனும், போராடும் மக்கள் பிரதிநிதிகளுடனும் சமரச பேச்சு நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது.
 
இதற்கிடையே போராட்டம் கடுமையாக நடைபெற்று வரும் ஹோம்ஸ் நகரில் ராணுவத்தின் தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள 47 பேர் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே பிணமாக கிடந்தனர்.இவர்களை போரளிகள் கொன்றதாக சிரியா தகவல் தொடர்பு மந்திரி தெரிவித்துள்ளார்.
 
ஆனால் ராணுவத்தினர் கொலை செய்ததாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரத்தம் தோய்ந்த பிணங்களை போஸ்டராக அச்சடித்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். மேலும் ஆன்லைனிலும் வீடியோவாக ஒளிபரப்பி வருகின்றனர்.

0 கருத்துகள்: