தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.3.12

ஓசோனை விளக்கிய நோபல் வெற்றியாளர் ஷேர்வூத் மரணம்


பூமியின் மெல்லிய ஓசோன் படலம் குறித்து விளக்கியதற்காக வேதியியலுக்கான நோபல் பரிசுபெற்ற ஷேர்வூத் ரெளலண்ட்(வயது 84) சனிக்கிழமை காலமானார்.ஷேர்வூத் ரௌலண்ட், சூன் 28ம் திகதி 1927ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்.பி.ஏ பட்டப்படிப்பை Ohio Wesleyan University ல் படித்தார். பின்னர் பி.ஹெச்டி முனைவர் பட்டத்தை University of Chicago ல் பெற்றார்.இதன்பின்பு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார்.
ஓசோன் படலம் எவ்வாறு அமைந்துள்ளது, சுற்றுச்சூழல் பாதிப்பின் மூலம் அது எவ்வாறு தேய்வடைகிறது என்பதை விளக்கியதற்காக கடந்த 1995-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை ஷேர்வூத் ரௌலண்ட் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: