தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.12

தமிழக எம்பிக்கள் பற்றி தவராககூறியதற்கு மன்னிப்புக் கோரிய சிறிலங்கா தூதுவர்?

தமிழக எம்பிக்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவ ர்கள். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு விசாரணை மேற் கொள்ள வேண்டும் என,  சிறிலங்காத் தூதவர் பிரசாத் காரிய வாசம் தெரிவித்தது தொடர்பில் மன்னிப்புக் கோரியிருப்பதா கத் தெரியவருகிறது.நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செய்தி ஒ ன்றிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்திருந்ததாகவும் , இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவும் இதர தமிழக எம்.பிக்களும், மத்திய வெளியுறவு
அமைச்சர்எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் முறைப்பாடு தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம் முறைப்பாட்டினைத் தொடர்ந்து, தூதுவர் பிரசாத் காரியவாசத்தை மத்திய வெளியுறவுத்துறை நேரில் சமூகம் அளித்து விளக்கமளிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பிற்கிணங்க சிறிலங்காத் தூதுவர் காரியவாசம் மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரை இன்று நேரில் சந்தித்துப் பேசியதாகவும், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அதன்போது தூதுவர் பிரசாத் காரியவாசம், தமிழக எம்.பிக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவன் நான். அவர்கள் குறித்து தவறாக நான் எதனையும் சொல்லவில்லை. எனது கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளன. அவர்களை விசாரிக்க வேண்டுமெனக் கோரும் அதிகாரம் எனக்கு இல்லை. எனது கருத்துக்கள் தமிழக எம்.பிக்களின் மனதைப் புண்படுத்துவதாக இருந்தால், அதற்காக நான் பகிரங்க மன்னிப்பு கோரிக் கொள்கிறேன் என்பதை இந்திய மத்திய வெளியுறவு இணைச் செயலாளரிடமும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார் எனத் தமிழகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: