புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதுப் புதல்வர், இலங்கை இராணுவத்தினரால் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், “சனல் 4′ இன் புதிய நாடாவில் வெளியாகியுள்ளது. இலங்கை அரசு குறிப்பிடுவது போ ல இது ஒரு போலித் தயாரிப்பல்ல; இது உண்மையானது ; அசலுக்குச் சரியானது என செவ்வாய்க்கிழமை மேற்படி சனல் 4 இந்திய ஆங்கில நாளிதழான “இந்து’ வுக்குத் தெ ரிவித்துள்ளது.2009 ஆம் ஆண்டு மே
மாதம் பாலச்சந்திர ன் சரணடைய முற்பட்டசமயத்தில் குரூரமாக இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை உள்ளடக்கிய நாடா நம்பகத்தன்மை கொண்டது. பிரபல பகுப்பாய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உண்மைத்தன்மை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேற்படி 2சனல் 4′ அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
மாதம் பாலச்சந்திர ன் சரணடைய முற்பட்டசமயத்தில் குரூரமாக இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை உள்ளடக்கிய நாடா நம்பகத்தன்மை கொண்டது. பிரபல பகுப்பாய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உண்மைத்தன்மை உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேற்படி 2சனல் 4′ அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
தண்டனைக்குட்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப்பில் வெளியான நாடாக்கள் வரிசையில், இன்று வெளியாகும் புதிய நாடாவாகும். இதன் தயாரிப்பாளரும் ஆவணப்பிரிவு இயக்குநருமான கலும் மெக்ரே, இலங்கையின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்துள்ளார். அத்துடன், இதற்கு ஆட்சேபனையும் தெரிவித்துள்ளார்.
கலும் மெக்ரே இது தொடர்பாக இந்து இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பின்வருமாறு விவரித்துள்ளார்: பாலச்சந்திரனின் துப்பாக்கிச்சன்னங்களால் துளைக்கப்பட்ட சடலம், அவரது படுகொலை செய்யப்பட்ட பாதுகாவலர்களின் சடலங்களுக்குப் பின்னால் கிடந்தது. இந்த நாடா மதிப்புக்குரிய நியாய ஸ்தலத்துக்குரிய போர்சனிக் பகுப்பாய்வாளர் பேராசிரியர் டெரிக் பவுண்டரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்டது. அச்சூழல் குறித்தும் அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.
அச்சிறுவனை நோக்கியே முதன்முறையாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது எனத் தாம் கருதுகிறார் எனப் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவிக்கிறார். சிறுவனின் பாதுகாவலர்களின் கரங்கள் பின்னால் கட்டப்பட்டும், கண்கள் கட்டப்பட்டும் உள்ளன. கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் அந்நிகழ்ச்சியைப் பார்க்க அச்சிறுவன் முயன்றிருப்பார். அச்சமயம் முதலில் துப்பாக்கி சிறுவனை நோக்கித் திரும்பியிருக்கலாம் எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். ஒரு வரிசைச்சிப்பாய்களால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமையையே மேர்ஸனி ஆய்வு காட்டுகின்றது என்றும் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, வெளியில் கசிந்த சட்டரீதியான மரண ஆதார ஆவணத்தையும் “சனல் 4′ “பார்வை’யிட்டுள்ளது. அதில், சிரேஷ்ட இலங்கை அதிகாரியொருவர் பாதுகாவலர்களுடன் சரணடைந்த பாலச்சந்திரன் அரச சிப்பாய்களால் கொல்லப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளது.
“சரணடையச் சென்றுகொண்டிருந்த ஐந்து பாதுகாவலர்களுடன் அவர் காணப்பட்டுள்ளார். பின்னர்தான் அவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் எனப் பாதுகாப்புப் படையினர் கண்டுகொண்டுள்ளனர் என நான் அறிந்தேன்” என்றும் கசிந்த இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தை ஆய்வுக்குட்படுத்தி இது போலி அல்ல, அசல்தான் என நாம் கண்டுபிடித்தோம். இலங்கைப் பாதுகாப்புப் படைகள் சரணடையும் அல்லது பிடிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளைப் படுகொலை செய்து வந்துள்ளன. அவர்களில் சிறுவர்களும் அடங்குவர். இதற்கான புதிய சாட்சியம் எமது இரத்தத்தை உறையவைக்கின்றது.
இந்த நாடா 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முதல் இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டது. வேடிக்கை விநோத மனோநிலையில், இலங்கைப் படைகளால் இந்நிகழ்வுகள் பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 12 வயது சிறுவனொருவர் தரையில் கிடக்கிறார். இடுப்புவரை உடை இல்லை. நெஞ்சில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்த ஐந்து துவாரங்கள் உள்ளன. அப்பக்கத்தில் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன. அவை அவரின் பாதுகாவலர்களின் சடலங்களாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
தரையில் உரியப்பட்ட உடைகள் கிடக்கின்றன. சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் கைகளையும், கண்களையும் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அவர்களின் உடைகள் அவையென நாடா தெரிவிக்கின்றது. பாலச்சந்திரன் சுடப்படுவதற்கு முன்னர் அவரது கட்டுகள் அவிழ்க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வாறு மெக்ரே தமது பேட்டியில் விவரித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக