தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.3.12

130 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியத்தை வரைந்தது யார்? எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.


130 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தை புகழ்பெற்ற ஹாலந்து ஓவியர் வான்கோதான் வரைந்தார் என்று எக்ஸ்ரே சோதனையில் தெரியவந்துள்ளது. ஹாலந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ. 1853ல் பிறந்து 1890ல் மறைந்தார். ஏராளமான ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாலந்தின் அர்ன்ஹம் நகரில் உள்ள குரோலர் முல்லர்

அருங்காட்சியகத்துக்கு கடந்த 1974ம் ஆண்டு ஒரு ஓவியம் கிடைக்கப் பெற்றது. இரு வீரர்கள் குத்துச்சண்டை பயிற்சி செய்வது போன்ற ஓவியம் அது. மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது. ஆனால், யார் வரைந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.


ஓவியர் யார் என்று கண்டுபிடிக்க பல்வேறு கட்டமாக ஆய்வுகள், பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அதிநவீன எக்ஸ்ரே தொழில்நுட்ப பரிசோதனை செய்யப்பட்டது. பிரபல ஓவியர்களின் ஓவியங்களை எக்ஸ்ரே உதவியுடன் ஒப்பிட்டு பார்த்ததில், வான்கோதான் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தனது சகோதரர் தியூவுடன் வான்கோ தங்கியிருந்தபோது இதை வரைந்திருக்க வேண்டும். 1880களில் இதை வான்கோ வரைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பற்றி ஆம்ஸ்டர்டாமில் உள்ள வான்கோ அருங்காட்சியக அதிகாரி லோயிஸ் வான் டில்போர்க் மேலும் கூறுகையில், ‘‘பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வர்ப் ஓவிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான பிரத்யேக முறைகளை கையாள்வது வழக்கம். அதில் அரைநிர்வாண ஓவியங்கள் மிகப்பிரசித்தம். வான்கோ 1886ம் ஆண்டு இக்கல்லூரியில் ஓவிய மாணவராக இருந்துள்ளார். இப்படத்தை பார்க்கும் போது அது இவரது ஓவியம்தான் என்பது தெளிவாகி உள்ளது. சட்டையின்றி இரண்டு வீரர்கள் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவது இதற்கு சான்று’’ என்றார்.

0 கருத்துகள்: