தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.12

பத்திரிக்கையாளர் காஜிமி விவகாரம் : பிரதமரை சந்தித்த 10 எம்.பி,க்கள்!

பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மத் காசிமி மீது,  தீவிரவாத பழி சுமத்தி, கைது செய்து ள்ளது போலீஸ். முஸ்லிம் வாலிபர்கள் பலரை, ஒருவர் பின் ஒருவராக குறி வைத்து, கைது செய் து வந்த காவல்துறை,  தற்போது, அதற்காக குரல் கொடுக்கும்
பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ் மத் காசிமியை, கைது செய்துள்ளது
டெல்லி போலீஸ். இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை, நேற்று 10 முஸ்லிம் எம்பிக்கள் சந்தித்து, போலீஸ் அத்துமீறல்களால், முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற  நிலையில் உள்ளனர்,  காரணமான போலீசார் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இது போன்ற கைது நடவடிக்கைகளை கட்டுப் படுத்த முடியும் என்றனர் எம்பிக்கள்.   


காஜிமி'யை உடனடியாக விடுதலை செய்ய மறுத்தால், வீதியில் இறங்கி போராடுவோம் என்றும் பிரதமரை எச்சரித்தனர். அனைத்தையும் செவிகொடுத்த கேட்ட பிதமர், தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொண்டதோடு, இது குறித்து தாம் உள்துறை அமைச்சர், ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்கும், சுல்தான் அஹ்மது எம்பி, ராஜ்யசபா எம்பிக்கள் முஹம்மது அதீப், சையத் அஜீஸ், சாலிம் அன்சாரி, லோக்சபா உறுப்பினர்கள் ஷபீகுர் ரஹ்மான், முஹம்மது ஷபீ, ஹசன் கான், அஸ்ராருல் ஹக், சம்பல், மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி, உள்ளிட்ட 10 எம்பிக்கள் கலந்து கொண்டனர். 

2 கருத்துகள்:

HOTLINKSIN.COM திரட்டி சொன்னது…

உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்

பெயரில்லா சொன்னது…

mukthar abbas naqui is a bjp leader,from this incident the muslims must understand how the bjp acts truly to the all peoples