சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சிஅரியமங்கலம் சோதனைச்சாவடியில் திருச்சி சரக காவல்துறை
துணைத்தலைவர் அமல்ராஜ் முன்னிலையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
துணைத்தலைவர் அமல்ராஜ் முன்னிலையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த வாகனத்தினை காவல்துறையினர் சோதனையிட்ட போது அதில் திவாகரன் இருந்துள்ளார். உடனடியாக அவரைக் கைது செய்து நீடாமங்கலம் அழைத்து வந்தனர். 2.30 மணி அளவில் நீடாமங்கலம் குற்றவியல் நடுவர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, நடுவர் முன் திவாகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
திவாகரனை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க குற்றவியல் நடுவர் ஆணை பிறப்பித்ததை அடுத்து, திவாகரனை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். திருச்சி செல்லும் வழியில் பாபநாசம் மருத்துவமனையில் திவாகரனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டது. அதன்பின்னர் அவர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சசிகலாவின் சித்தப்பா மருமகனான ராவணன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக