தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.12

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது எளிதான காரியமல்ல. அமெரிக்க கணிப்பு


அணுஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக இருந்தால், 100 விமானங்கள் தேவைப்படும் என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். அணுஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, ஐ.நா. மற்றும் அமெரிக்க, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து, பிரான்சுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை

2 நாட்களுக்கு முன் ஈரான் அதிரடியாக நிறுத்தியது. மேலும், அணுஆயுத திட்டங்களை கைவிட வேண்டும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறிவருகிறது.
அப்படி ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இஸ்ரேலில் இருந்து ஈரானை சென்றடைய ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செல்ல வேண்டும். இதற்கு விமான எரிபொருள் நிறைய தேவைப்படும். இடையில் வானிலேயே விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டி இருக்கும்.
அத்துடன் 100க்கும் அதிகமான விமானங்கள் இருந்தால்தான், ஈரானில் உள்ள பல பதுங்கு குழிகள், அணு சக்தி திட்டங்கள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த முடியும். இதற்கு அதிக செலவாகும், சிக்கலானது என்று அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: