தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.12

ஒபாமாவை சந்திக்க அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர். ஈரான் மீது போரா?


ஈரான்-இஸ்ரேல் விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ 3 நாள் பயணமாக அமெரிக்க செல்கிறார்.  இது குறித்து வெள்ளை மாளிகை  செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ, அடுத்த மாதம் 5-ம் தேதி 3 நாள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்க வருமாறு அதிபர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி அதிபர் ஒபாமாவை சந்தி்த்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவருடன் இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இகுட்பாரக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.  
 
அமெரிக்காவில், ‌அமெரிக்கன், இஸ்ரேல் பொதுவிவகாரக்குழு (ஏ.ஐ.பி.ஏ.சி.) மாநாடு நடக்கிறது. இதில் நெட்டன்யாகூ கலந்து கொண்டு பேசுகிறார். இந்த சந்திப்புக்குப் பின்னர் ஈரான் விவகாரம் குறித்து ஒபாமா, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் ‌டோனிலன் ஆகியோ‌ரிடம் ஆலோசனை நடத்துகிறார்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0 கருத்துகள்: