தான் நிச்சயம் லிபியாவுக்கு மீண்டும் திரும்புவேன் எ ன லிபிய முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின் மகன் சாதி கடாபி (Saadi Gaddafi)தெரிவித்துள்ளார். அல் அரா பியா தொலைக்காட்சிக்கு, நைகரிலிருந்து தொலை பேசி மூலமாக அவர் உரையாடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்போதுள்ள ஆட்சி யை, 70% வீதமான மக்கள் விரும்பவில்லை. அவர்க ள் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். குண்டர்களா லும்,
ரவுடிகளாலும் நாடு தற்போது ஆளப்படுகிறது. இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான சக்தி மக்களுக்கு விரைவில் வரும். அப்போது நானும் அங்கு திரும்புவேன். ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை ஒன்றும் இடம்பெறாது என வாக்குறுதி அளிக்கிறேன் என்றார்.மௌமர் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் லிபியாவிலிருந்து வெளியேறிய 38 வயதான சாதி கடாபி, நைகரில் அரசியல் தஞ்சம் கோரினார். சாதி கடாபியை மீள கையளிக்குமாறு லிபிய புதிய அரசு பலமுறை கோரிய போதும் நைகர் அவரை கையளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக