சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல் கதீஃப் மாவட்டத்தில் அவாமியா என்னும் ஊரில் நேற்று மதியப் பிரார்த்தனை நேரத்தில் அடையாளம் தெரியாத கலக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறை வழமையான நகர்வலம் சென்று கொண்டிருந்த போது முகமூடிஅணிந்துவந்த சிலர் காவல்துறை வாகனங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறை திருப்பிச் சுட்டதில் சிலர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் அருகிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகையில் உயிரிழந்துள்ளார். மற்ற மூவர் காயங்களுக்கு சிகிட்சைப் பெற்று வருகிறார்கள்.
இத்தகவலை சவூதி அரேபிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காடி சவூதி இதழாளர் முகவம் (SPA) தெரிவித்துள்ளது.
ஷியா பிரிவு மக்கள் நிறைந்துள்ள அல் கதீஃப் நகரில் கடந்த ஜனவரி 24ம் தேதி, கலகக்காரர்கள் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிக்கத்தக்கது.
ஷியா பிரிவு மக்கள் நிறைந்துள்ள அல் கதீஃப் நகரில் கடந்த ஜனவரி 24ம் தேதி, கலகக்காரர்கள் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிக்கத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக