இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் பொழுதுபோக்கு தளமாக விளங்கும் சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களிலுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுபற்றி நீதிபதி கூறும் போது, "வலைதளங்கள் அவற்றிலுள்ள ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு உடனடியாகச் செய்யவில்லை என்றால் சீனாவைபோல பேஸ்புக், கூகுள் இணைய தளங்களை தடை செய்ய நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இணைய தளங்களில் நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய அரசும் இதுகுறித்து பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக