தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.12

மின்சாரத்தை சிக்கனப்படுத்த சென்னை வீதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்த நடவடிக்கை

சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 116 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விளக்குகள் அனைத்தும் டியூப் லைட்க்கள், அதிகமான மின்சாரத்தை கொண்டு எரியும் சோடியம் விளக்குகளும் உள்ளன. 111 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 56 ஆயிரத்து 162 டியூப்
லைட்டுகள், 40 ஆயிரம் சோடியம் விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான மின் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. தெருவிளக்கு மின்சாரக் கட்டணமாக சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் ரூ.19 கோடி செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மின்சார சிக்கனத்தை கடைபிடிப்பதற்காக அலுவலகங்களில் சி.எப்.எல். பல்புகள் பொருத்தப்பட்டன. இதன்படி, 12 ஆயிரம் சி.எப்.எல். பல்புகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. 

பெரும்நகரங்களான டெல்லி, பெங்களூரில் மின்சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்காக தெருவிளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கு மின்சாரத்தேவை மிகக்குறைவு. ஆனால் இவை அதிக அளவு ஒளி கொடுக்கும். எனவே சென்னையிலும் அனைத்து தெரு விளக்குகளையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த விளக்குகளை பயன் படுத்துவதன் மூலம், மாநகராட்சி செலுத்தும் மின் கட்டணம் 40 சதவீதம் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே எல்.இ.டி. பல்புகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

சென்னைக்கு தினமும் 20 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின் தேவையை சாமாளிக்க குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய 2 குப்பை சேகரிப்பு மையங்களிலும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. 

தனியார் நிறுவனங்கள் மூலம் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி, ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், நமது நாட்டில் இருந்தும் 10 நிறுவனங்கள் இந்த மின்நிலையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான டெண்டர் விட ஏற்பாடு நடந்து வருகிறது.

0 கருத்துகள்: