கேரள பகுதிக்குள் இருப்பதால் முல்லை பெரியாறு அணை பகுதிகளை உடைப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டுஎன ஐவர் குழுவிடம் கேரள அரசு புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் நேற்று டெல்லியில் ஐவர் குழுவின் கூட்டம் நீதிபதி ஆனந்த் தலைமையில் நடந்தது. அப்போது கேரளா
அதில், 'கேரளாவிற்குள் முல்லை பெரியாறு அணை இருக்கிறது. எனவே அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு கேரளாவுக்கு உரிமை உண்டு. புதிய அணை கட்டிய பின்னர் அதை பாதுகாக்கும் உரிமையும் கேரளாவுக்கே வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்துடன் நீர் பங்கீடு குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெரியாற்றை நேரில் சென்று ஆராய்ந்த ஆனந்த் குழுவின் தொழில்நுட்ப வல்லுனர்கள், அணை உறுதியாக இருப்பதாகவும், உடைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமது அறிக்கையை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
முன்னதாக பெரியாற்றை நேரில் சென்று ஆராய்ந்த ஆனந்த் குழுவின் தொழில்நுட்ப வல்லுனர்கள், அணை உறுதியாக இருப்பதாகவும், உடைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமது அறிக்கையை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக