பரபரப்பாக ஏதாவது எழுதியோ பேசியோ வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எதிராக விஷமத்தனமாகக் கட்டுரை எழுதியதால் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவரது கட்டுரையை நீக்கியது.இதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு எதிராக மதநல்லிணக்கத்துக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இ.பி.கோ பிரிவு 154A இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று கோரிய சுப்பிரமணிய சாமியின்முன்ஜாமின் மனுவை ஏற்றுக்கொண்ட
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனவரி 30ஆம் தேதிவரை சுப்பிரமணிய சாமியைக் கைது செய்யக்கூடாது என்று அனுமதித்துள்ளதோடு, சுப்பிரமணிய சாமிக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
"நாமிருக்கும் இந்தியா ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனைப்போன்ற நாடல்ல. இஃது ஓர் சமய சகிப்புத்தன்மைக்குப் பேர்போன தேசம். இங்கிருப்பவர்கள் சக குடிமக்களின் உரிமைகளை மதித்து கண்ணியமாகச் செயல்பட வேண்டும்" என்றும், "இனிமேல் சுப்பிரமணியசாமி இதுபோல் வன்மமாக கட்டுரை எழுதவோ பேசவோ கூடாது" என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் கட்டுரை எழுதிய நக்கீரன் பாத்திரிக்கையாசிரியர் கோபாலும், இதேபோல் சென்னை நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளதோடு பல்வேறு பிரிவுகளில் வழக்கையும் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக