கோஸ்டா கொன்கோர்டியோ உல்லாச கப்பல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த போது அதிலிருந்து வெளியேறி, உயிர் காப்பு படகுகளை நோக்கிதுணிச்சலுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடர்பான காணொளி காட் சிகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியின் மிகப்பெரிய உல்லாச கப்பலான கோஸ் டா கொன்கோர்டியோ, ஜியிலியோ தீவு துறைமுகத்திற் கு அருகில் வைத்து
விபத்துக்குள்ளானது. கப்பல் பாதி க்கு மேல் கடலில்
மூழ்கிக்கொண்டிருந்த போது கப்பலிலிருந்து வெளியேறி மேல்பக்கமாக உயிர் காப்பு படகுகளை நோக்கி பயணிகள் சென்று கொண்டிருக்கும் காணொளி காட்சிகளே வெளியிடப்பட்டுள்ளன. ஒற்றைக்கயிறை பிடித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அவர்கள் செல்லும் காட்சியை இத்தாலியின் கடலோர காவல்படை கமெராக்கள் சில படம்பிடித்துள்ளன.
இதேவேளை கப்பல் விபத்துக்குள்ளானது தெரிந்தும், உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்காமல், உயிர்காப்பு அங்கிகளை கப்பல் பயணிகள் தாம் முதலில் அணிந்து கொண்டு தப்பிப்பதற்கு முயற்சி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. கப்பலிருந்து தப்பிய பிரெஞ்சு நாட்டவர் எடுத்த புகைப்படமொன்றின் ஊடாக இதனை நிரூபித்துள்ளார்.
கப்பலில் மின்சாரம் மட்டும் தான் துண்டிக்கப்பட்டுள்ளது. பாரதூரமான பிரச்சினை எதுவும் இல்லை என முதலில் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் கப்பல் ஊழியர்கள் மாத்திரம் உயிர்காப்பு அங்கிகளை (Life Jacket) அணிந்திருந்தை பார்த்த பயணிகள் சந்தேகம் கொள்ள தொடங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் பணியாளர்கள் வயோதிபர்களையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக கப்பல் நீரில் மூழ்கிய பகுதிக்குள் மீட்பு குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ள போதும், இன்னமும் 29 பயணிகளுக்கு என்ன ஆனது என்பது என தெரியவில்லை. இதுவரை மீட்கப்பட்ட 4,200 க்கு மேற்பட்ட பயணிகள் கப்பலிலிருந்து தப்பியுள்ளனர். 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போயுள்ளவர்களில் ஐந்து வயது இத்தாலிய சிறுமி, அவரது தந்தை ஆகியோரும் அடக்கம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக