தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.1.12

இலங்கை மீது எந்நேரத்திலும் சர்வதேச விசாரணை பாயலாம்


இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப் படும் போர்க் குற் றங்கள் தொடர்பில் விசாரணை செய்யாம ல் இந்தியாவும், சீனாவும் இலங்கையை பாதுகாத்து வருகி ன்ற போதிலும் இதனைத் தொடர்ந்தும் எதிர் பார்க்க முடியா து என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக் கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள் ளார்.போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்து சர்வதே ச விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் ஆறு
மாதம்,ஒரு வருடம் அல்லது இரண்டு
வருடங்களில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித் துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற பொதுமக்கள் இழப்புகள் குறித்து கேஜ் என்ற நூலில் குறிப்பிடப் பட்டுள்ள புள்ளி விவரத் தரவுகள் சரியானவையே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றியளிக்காது. தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களின் ஆதிக்கம் சாதகமான நிலைமையல்ல. இறுதிக்கட்டப் போரின் உண்மை நிலைமைகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. இதனை அறிந்து கொள்ள இன்னும் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: