டெஹ்ரான்:ஈரானில் மூத்த இமாம்களிடம் சமூக பிரச்சனைகள் குறித்து கேட்கப்படுவதும் மேலும் இந்த பிரச்சைனகள் இஸ்லாமிய சித்தாந்தகளோடு ஒத்துப்போகிறதா என்றும் பார்க்கப்படுவது இயல்பானதே. இதன் அடிப்படையில் பேஸ்புக் பயன்பாடு பற்றி மூத்த இமாமான ஆயத்துல்லா லோது புல்லாவிடம்
கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் தீய ஒழுக்கங்களையும், தீய கருத்துகளையும் பரப்பும் எந்த இணையதளத்தை பார்ப்பதும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது என்றும் இது போன்ற இணையதளங்களில் உறுப்பினராக இருப்பது ஹராம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற தீய கருத்துக்களுக்கு இடம் அளிக்காத இணையதளங்களை பார்பதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானில் இதுவரை 5 மில்லியன் இணையத்தளங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் மேற்கத்திய கலாசாரம் பரவுவதை தடுக்க கடந்த முப்பது ஆண்டுகளாக ஈரானிய அதிகாரிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் தவறான கருத்துக்களை பதிவு செய்யும் இணையத்தளங்களை தடைசெய்து வருகின்றனர்.மேலும் ஈரான் இணையதளங்களை இன்னும் சிறப்பாக கண்காணிக்க சமீபத்தில் சைபர் காவல்துறையை நிறுவியுள்ளது. மேலும் ஈரான் தனது சொந்த வலைதளத்தை விரைவில் நிறுவ திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக