தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.1.12

முஸ்லிம் இளைஞரின் கஸ்டடி மரணம்: போலீஸ் தாக்குதலே காரணம் – குடும்பத்தினர்


சாவக்காடு(கேரளா):கேரள மாநிலம் மண்ணத்தலா என்ற இடத்தில் திருவிழா தொடர்பான தகராறில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவர் போலீஸ் காவலில் வைத்து மரணமடைந்தார். அவரது பெயர் ஷாஹு(வயது 34).ஷாஹுவின் மரணத்திற்கு காரணம் போலீஸ் தாக்குதல் என அவரது உறவினர்களும், ஊர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் காயமுற்ற ஷாஹு, மருத்துவமனைக்கு கொண்டுபோகும் வழியில் இறந்துவிட்டார் என போலீஸ் தரப்பு கூறுகிறது.
தகவல் அறிந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேசன் முன்பு திரண்டனர். ஷாஹு மார்க்சிஸ்ட் கட்சியின் அனுதாபி ஆவார். மேலும் சி.ஐ.டி.யுவின் உறுப்பினராக உள்ளார். ஷாஹுவுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் தந்தை, மகன் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது.
இளைஞர் ஷாஹு போலீஸ் நிலையத்தில் மரணித்த சம்பவத்தில் மனித உரிமை கமிஷன் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவுச் செய்துள்ளது. போஸ்ட் மார்ட்டத்திற்கு பிறகு இன்று உடல் அடக்கம் செய்யப்படும். ஷாஹுவிற்கு மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

0 கருத்துகள்: