தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.1.12

ஆப்கானிஸ்தானிலிருந்து இங்கிலாந்து படைகள் முழுவதும் 2014-ம் ஆண்டிற்குள் வெளியேறும்: டேவிட் கேமரூன்

லண்டன், ஜன. 31-  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க த லைமையிலான நேட்டோ படை முகாமிட்டு உள்ளது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரே லியா போன்ற நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம் பெ ற்றுள்ளனர். இந்த வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைக ளை மேற்கொள்வதிலும், தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். தற்போது இந் த நாடுகள்
அங்கிருந்து படிப்படியாக வீரர்களை வாபஸ் பெற முடிவு செய்துள் ளன. பிரான்ஸ் நாடு அடுத்த ஆண்டு இறுதிக்குள் தனது படை முழுவதையும் வாபஸ் பெறுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் சமீபத்தில் லண்டனில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். படை வாபஸ் குறித்து இருவரும் விவாதித்தனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து படைகள் முழுவதும் 2014-ம் ஆண்டிற்குள் வெளியேறும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

0 கருத்துகள்: