ஈராக்கில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொ லை குண்டு தாக்குதலில் 53 பேர் பலியாகினர்.பாஸ்ரா நகர் அருகில், ஷியா இஸ்லாமிய யாத்திரிகர்களை கு றிவைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. காவ ற்துறையினரின் சீருடையில், போலி அடையாள பத்தி ரத்துடன் வந்த தற்கொலை குண்டுதாரி காவற்துறை தடுப்பு நிலையத்தை அடைந்ததும் இக்குண்டை வெடிக் க செய்துள்ளான். பாஸ்ராவில் உள்ள ஷியா முஸ்லீ
ம்களின் பிரதான பள்ளிவாசலுக்கு யாத்திரிகள் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் போது 53 பேர் பலியாகியுள்ளதுடன், 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அண்மைக்காலமாக ஈராக்கில் ஷியா முஸ்லீம்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக