தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.1.12

360 மணி நேரத்தில் 30 மாடிக் கட்டிடத்தை கட்டி சீனா சாதனை


ஜனத்தொகையையும், வளங்களையும் வைத்து வேகமாக முன் னேறி வருகிறது. வெறுமனே 360 மணி நேரத்தில் அதாவது 15தி னங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள போட் குறூப் என்ற நிறுவனமே இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகு தியில் உள்ள கூனான் மாநிலத்தில் வைத்து சீன விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிறைவேற்றிக் காட்டி உலகை அதிசயிக்க வைத்துள்ளார்கள். நத்தார் தினத்திற்கு
சில தினங்கள் முன்னதாக தொடங்கி, புத்தாண்டு தினத்தன்று இந்தக் கோட்டல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல 15 மாடிக் கட்டிடத்தை ஆறு தினங்களில் கட்டி சீன நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இப்பகுதியில் பூகம்பம் வந்தால் கட்டிடம் தாங்குமா என்ற கேள்வியை பலர் எழுப்பினர். சுமார் 9.0 ரிக்டர் அளவு நில நடுக்கத்தை கட்டிடம் தாங்கும் என்கிறார்கள் சீனர்கள். இந்த வேகத்தில் போனால் சீனாவின் குடித்தொகைப் பெருக்கம் அந்த நாட்டிற்கு பாரிய பிரச்சனையாக வருவதற்கு வாய்ப்பில்லை. காட்சி 01 : 30 மாடி கட்டிடம் – காட்சி 02 : 15 மாடி கட்டிடம்

0 கருத்துகள்: