தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.1.12

61 பெண்களுக்கு மயக்கமருந்தின்றி குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்

அராரியா, ஜனவரி 10- 61 பெண்களை இரண்டே மணி நே ரத்தில் மயக்க மருந்தின்றி குடும்ப கட்டுப்பாடு ஆபரே ஷன் செய்து மூன்று ஆடவர்கள் செய்த அராஜகம் பீகா ரில் அரங்கேறியுள்ளது.பீகார் மாநிலத்தில் அராரியா மா வட்டத்தில் உள்ள கபார்போரா கிராமத்திற்கு மூன்று ஆ டவர்கள் வந்தனர். இங்குள்ள வசிக்கும் படிப்பறிவில்லா த ஏழை மக்களிடம் தாங்கள்
அரசு சார்பற்ற நிறுவனத் திலிருந்து வந்து அங்கு குடும்ப
கட்டுப்பாடு முகாம் நடத்தவுள்ளதாகவும் கூறினர். மேலும், தங்களிடம் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்பவர்களுக்கு மருந்து மாத்திரைகளும், 600 ருபாயும் தருவதாக அறிவித்தனர்.இதைகேட்ட படிப்பறிவில்லாத 61 ஏழைப் பெண்கள் அறுவை சிகிச்சைக்குச்  சம்மதித்தனர். பின்னர் அந்த மூன்று ஆடவர்களும் சேர்ந்து, இரண்டே மணிநேரத்தில் 61 பெண்களுக்கு மயக்க மருந்து கூட இல்லாமல் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தனர். அவர்களுக்கு ஏற்றப்பட்ட குளுகோஸ் கூட ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு மீதமானது என கிராமத்தினர் தெரிவித்தனர்.அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களில் பலருக்கு உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து அந்த மூன்று ஆடவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.கிராம மக்களின் அறியாமையையும்  வறுமையையும் பயன்படுத்தி அந்த மூன்று ஆடவர்களும் இந்த கொடூரச் செயலைப் புரிந்துள்ளனர். அந்த பெண்களுக்கு ரூ 600 மற்றும் காலாவதியான மருந்துகளை அந்தா ஆடவர்கள் தந்துள்ளனர் என அராரியா மாவட்ட காவல்துறை அதிகாரி ஷிவ்தீப் லாண்டே கூறினார்.

0 கருத்துகள்: