தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.1.12

20 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட ஈரான் நாட்டு கப்பல் மீட்பு


ஈரான் நாட்டு கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள் ளையர்கள் பிடித்துச் சென்று இருந்தனர். அதை பயன் படுத்தி அவர்கள் பிற கப்பல்களை தாக்கி, கொள்ளை யடித்து வந்தனர். கடந்த சனிக்கிழமை அந்தக் கப்ப லை 'நேட்டோ' படையில் இடம் பெற்ற டென்மார்க் நா ட்டு கப்பல் வழிமறித்து பிடித்தது. அப்போது தப்பி ஓட முயன்ற கொள்ளைக்காரர்களை
டென்மார்க் கப்பலி ல் இருந்த ராணுவத்தினர்
வானத்தை நோக்கி சுட்டு, எச்சரித்தனர். கப்பல் நின்றதும், அதில் பணயக் கைதிகளாக இருந்த ஈரான் நாட்டு மாலுமிகள் 5 பேர், பாகிஸ்தான் நாட்டு மாலுமிகள் 9 பேர் ஆக மொத்தம் 14 பேரை விடுவித்தது. 25 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஈரான் நாட்டு கப்பல் அதன் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் சோமாலிய கொள்ளையர்களால் பிடித்து செல்லப்பட்டிருந்த இந்திய கப்பல் ஒன்றை ஓமன் நாட்டு கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 'நேட்டோ' படையில் இடம்பெற்று இருந்த அமெரிக்க கப்பல் படையினர் வழிமறித்து பிடித்தனர். அதில் இருந்த 20 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 9 கொள்ளையர்களை அவர்களது கப்பலிலேயே சோமாலியா நாட்டுக்குச் செல்ல அமெரிக்க கப்பல் அனுமதித்தது.

0 கருத்துகள்: