தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.1.12

இந்துக்கடவுள் விநாயகரைக் குறிக்கும் யானை சிலைகளை மூடுவதா? தேர்தல் கமிஷனுக்கு கண்டனம்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மாயாவதி மற்றும் அவரது கட்சி சின்னமான யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. சிலைகளை மூடும் பணி மந்தமாக நடந்ததால், நாளை மாலை 5 மணிக்குள் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நேற்று கெடு விதித்தது. இதையடுத்து லக்னோ மற்றும் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை மூடும் பணியை அரசு ஊழியர்கள் தீவிரமாக
மேற்கொண்டு வருகின்றனர்.  லக்னோவில் உள்ள பூங்காவில் 9 மாயாவதி சிலைகளும், 25 யானை சிலைகளும் உள்ளன. நொய்டாவில் 2 மாயாவதி சிலைகளும் 52 யானை சிலைகளும் உள்ளன. இதுதவிர பூங்கா முழுவதும் நூற்றுக்கணக்கான சிறிய யானை சிலைகளும் உள்ளன. அவை அனைத்தும் மூடப்படும். மாயாவதி சிலைகள் துணியாலும், யானை சிலைகள் பிளாஸ்டிக் பேப்பராலும் மூடப்படுகின்றன. 



தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை பகுஜன் சமாஜ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுவாமி பிரசாத் மவுரியா கூறுகையில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால், யானை சிலைகளை தேர்தல் கமிஷன் மூடுகிறது. அப்படியென்றால் குளத்தில் பூக்கும் தாமரைகளை மூடுவார்களா அல்லது தெருக்களில் செல்பவர்களை கையை  உயர்த்தி காட்ட தடை விதிப்பார்களா?’ என்றார். ஆனால் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை சரியானதுதான் என்று எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. இதற்கிடையில், யானை சிலைகள் மூடப்படுவதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொட ரப்பட்டுள்ளது. தீரஜ் சிங் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், விநாயகரை குறிக்கும் யானை சிலைகளை துணி போட்டு மூடுவது, இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
த.குன்னம்:இந்த மூடர்கள் எதற்கெதற்கெல்லாம் கோர்ட்டு கேஸ் என்று ஒரு விவஸ்தயே இல்லாமல் போய்விட்டது ,தானக்கு வேலையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இவர்களை போன்றவர்களின் மேல் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் அப்போதுதான் பொழுதுபோகாமல் நீதிமன்றத்தின் வேலைகளை வீணடிக்கும் வீணர்கள் திருந்துவார்கள்,

0 கருத்துகள்: