தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.11

உ.பி முதல்வர் மாயாவதி மீது ஊழல் புகார் தெரிவித்த ஐ.பி.எஸ் அதிகாரி மனநல மருத்துவனையில் அனுமதி

உத்தர பிரதேச முதல்வர்  மாயாவதி மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கடுமையாக சுமத்தியிருந்த,
உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ் அதிகாரி டி.டி.மிஸ்ரா, மனநிலை சரியில்லாதவர் என உ.பி அரசினால் வலுக்கட்டாயமாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மனநல
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீஸ்ரா சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், அவரது மனநிலை சீரான பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், பணி நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் உத்தர பிரதேச அரசின் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

உ.பி மாநில தீயணைப்பு துறையில் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த தேவேந்த தத் மிஸ்ரா, சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் வைத்து பேசுகையில், நான் பார்த்ததிலேயே மிக மோசமான ஊழல் அரசு மாயாவதியினத் தான் எனவும், தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பான தவறான ஆவணங்களில் கையெழுத்தும் படி மூத்த அதிகாரிகளே தன்னை கட்டாயப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் உ.பி. மாநில அரசு துறைகளில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும் மூத்த அதிகாரிகளே ஊழலை ஊக்கிவிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ள அவர், இது தொடர்பான ஆவணங்களை வெளியிட தயங்கமாட்டேன். ஆனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், காவற்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள மிஸ்ரா, லக்னோவில் உள்ள மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதகாலமாகவே அவருக்கு மன ரீதியான பாதிப்புக்கள் இருந்தது தெரியவந்துள்ளதாக மிஸ்ராவை பரிசோதித்த வைத்தியர் கூறியுள்ளதாக உ.பி. முதன்மை செயலர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: