உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியை ஊழல்வாதி என கடுமையாக விமர்சித்தநிலையில், மனநிலை சரியில்லாதவர் என மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்த, அம்மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி டிடி.மிஸ்ரா, தன்னை வீட்டுக்கு செல்ல விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.சத்திரபதி சஹுஜி மகராஜ மருத்துவயில் கல்லூரியில்
உளவியல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர், 'Bipolar Effective Disorder' (இரு முனை முறைகளில் மூளை வேகமாக யோசித்தல்) நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மருத்துவமனையின் உளவியல் நிபுணர் பி.கே.தலால் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது குடும்ப உறவினர்களுக்கு மாத்திரமே பார்வையிட அனுமதி வழங்குவதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்ல, விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ள பி.கே.தலால், எனினும், இன்னும் சில நாட்களுக்கு அவரது நடவடிக்கையை பார்க்க வேண்டும் எனவும், இது ஒரு நீண்டகால சிகிச்சை திட்டமாக அமையக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
எனினும் தற்போது மிஸ்ராவுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும், அதனால் வேறு யாரையும், மிஸ்ராவை சந்திக்க விட போவதில்லை எனவும் உளவியல் நிபுணர் பி.கே.தலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக