தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.11

நவம்பர் 22ம் திகதி பெங்களூர் நீதிமன்றில் ஆஜராக சம்மதித்தார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்வரும், நவம்பர் 22ம் திகதி பெங்களூரு
நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். முறைகேடான சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று பெங்களூரு நீதிமன்றில் தொடர்ந்து வரும் நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விசாரணைக்கென
வருகை தந்தனர்.
எனினும், இன்று சமூகமளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த போதும், ஜெயலலிதா அவர்களுடன் வரவில்லை. எதிர்வரும் 22 திகதிக்கு தாம் வர தயாராக இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் மூலம் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் தேவைப்பட்டால் 23ம் திகதியும் விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் என தெரிவித்தார். அதை ஏற்றுகொண்ட நீதிபதி, அந்நாளே நீதிமன்றில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

முறைகேடான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் இரு நாட்கள் நேரில் ஆஜராகி, நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளித்திருந்தார். எனினும் மறுபடியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்து, தம்மால் வர முடியாது, ஜெயலலிதா எதிர் மனு தாக்கல் செய்த போதும், அதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: