தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.11

இந்தியா, சீனா வளர்ந்து வரும் எதிரிகள்: அமெரிக்கா அலரல்


இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வளர்ந்து வரும் ஆபத்துக்கள் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்களிடையே உரையாற்றிய அவர், வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து ஆபத்தை அமெரிக்கா எதிர்நோக்கியிருப்ப
தாகவும், இதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாலித்தீவுகளில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் உலகளாவிய இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேசிய நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பனெட்டாவின் பேச்சு குறித்து உடனடியாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க நிர்வாகம், இந்தியாவுடன் அமெரிக்க நெருங்கிய உறவுகளை மேம்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இது இவ்விதமிருக்க:
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை, பசிபிக் கடலில் அமெரிக்கா சோதித்து பார்த்துள்ளது. அட்வான்ஸ்டு ஹைபர்சோனிக் வெபன் எனப்படும் அந்த ஏவுகணை, கவாய் பகுதியில் உள்ள ஏவுகணை சோதனை தளத்தில் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 3700 கி.மீ., தூரத்தை அரைமணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் சென்றடைந்ததாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் மெலின்டா மோர்கான் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: