தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.11

டாக்டர்கள் தவறாக நரம்பை துண்டித்தனர்; எடை குறைப்பு ஆபரேஷனால் பெண் என்ஜினீயர் பலி


பணியாற்றி வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் விசாகப்பட்டினம் வந்திருந்தார்.

அவர் உடல் சற்று பருமனாக இருந்ததால் ஆபரேசன் மூலம் எடையை குறைக்க முடிவு செய்தார். இதன்படி அவர் அங்குள்ள உடல் எடை குறைப்பு மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் பெற்றோர் மற்றும் உறவினர்களும் சென்றனர். பின்னர் ஹரிபிரியா அங்குள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர். அப்போது டாக்டர்கள் தவறுதலாக இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயை துண்டித்து விட்டனர். இதில் அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அவசர ஆவசரமாக 36 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார். இதையறிந்ததும் பெற்றோர்-உறவினர்கள் டாக்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் 3-வது டவுன் போலீசார் விரைந்து வந்து ஹரிபிரியாவின் உறவினர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.
பின்னர் தவறான ஆபரேசன் செய்த டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

உடல் எடையை குறைப்பதற்காக ஆபரேசன் செய்த பெண் என்ஜினீயர் இறந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: