தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.11.11

உலகை உலுக்கும் யூத தீவிரவாதம் - 5

மே 15- 1948 தந்துரா (TANTURA)இனப்படுகொலை : பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதர்களின் நிரூபிக்கப்பட்ட ஆதரங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கிட்டத்தட்ட 200 கும் மேற்பட்ட தந்துரா கிராமத்தை சேர்ந்த அப்பாவி பாலஸ்தீனியர்களை சியோனிச இஸ்ரேலிய பயங்காரவாத ராணுவம் படு கொலை செய்துள்ளது.
பலஸ்தீனில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் தந்துரா படுகொலையும் ஒன்று.
டெட்டி கேட்ஸ் (Teddy Katz) என்ற இஸ்ரேலிய வரலாற்று ஆய்வாளர் இதை பற்றி குறிப்பிடும் போது "பலஸ்தீனின் ஹைபா நகரிற்கு அருகில் அமைந்திருந்த தந்துரா கிராமத்தில் சுமார் 1500 ர்க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வசித்து வந்தனர்.பின்னர் இந்த இடம் யூத பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டு இந்த இடத்தில் கடற்கரை மற்றும் கூட்டுறவு பண்ணைக்கான வாகன நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவரும்(பலஸ்தீனியர்) தற்பொழுது மேற்க்குக் கரையில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ள பாவ்சி தஞ்சி (Fawzi Tanji)(73 வயது) என்பவர் இச்சம்பவத்தை விவரிக்கும் போது "எனக்கு அப்பொழுது 21 வயது எனது கண்முன்னே பாலஸ்தீனியர்கள் பத்து பேரை யூத தீவிரவாதிகள் பிடித்து கல்லறை சுவற்றிற்கு அருகில் நிற்க வைத்து சுட்டுக்கொன்றனர்.அதைப்போல மீண்டும் மீண்டும் பத்து பத்து பேராக நிற்க வைத்து சுட்டுக்கொன்றனர். 
டெட்டி கேட்ஸ் (Teddy Katz) இந்த படுகொலையை பற்றி மீண்டும் விவரிக்கும் போது" மீதமிருந்த தந்துரா கிராமத்தை சேர்ந்த பாலஸ்தீனியர்கள் அவர்களின் வீடுகளின் உள்ளே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர் மேலும் அவர் கூறும் போது பயங்கரவாத யூத ராணுவத்தினர் கண்ணில் படும் அசையக்கூடிய அனைத்து பொருட்களையும் சுட்டுக்கொண்டே சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்."பயங்கரவாத யூதர்களின் தாக்குதலில் இருந்து தப்பி மீதமிருந்த தந்துரா கிராமத்தை மக்கள தங்களது வீடு தொழில் அனைத்தையும் விட்டு விட்டு தங்கள் நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.
என்று வந்தேறி யூதர்களுக்கு என தனி நாடு உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை தங்களது சொந்த நாட்டையும் மக்களையும் இழந்த பாலஸ்தீன மக்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் தங்களது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் போராடுகின்றனர்.ஆனால் இன்றைய மீடியாக்கள் வரலாற்றை மறைத்து ஏதோ பாலஸ்தீனியர்கள் அப்பாவி யூதர்களை கொன்றுவருவதைப் போல பொய்யான தகவல்களை பரப்பிவருகின்றன.மீடியாக்கள் என்ன தான் பொய்யை பரப்பினாலும் வரலாற்றை எவராலும் திருத்தி எழுத முடியாது.யூதர்கள் அன்றிலிருந்து இன்றுவரை பாலஸ்தீனியர்களுக்கு எதிராக செய்துவரும் கொடுமைகளை மறைக்க முடியாது.நிட்சயம் ஒரு நாள் பாலஸ்தீன் தான் இழந்த அனைத்து இடங்களையும் மீட்கும்.சுதந்திர காற்றை சுவாசிக்கும்.அந்த நாள் உலக சர்வாதிகாரத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்த நாளாக உலக மக்களால் உணரப்படும் நாளாக இருக்கும். 

0 கருத்துகள்: