பேருந்து கட்டண உயர்வு இன்று நேற்று காலைமுதலே அமலுக்கு வந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ள னர்.போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று
கூறிய முதலமைச்சர் நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார்.வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு வெள்ளிகாலை முதலே அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் காலை நேரத்தில் பணிக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, எம் சர்வீஸ் என பல வழிகளில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக மக்கள் குமுறி வரும் நிலையில் இந்த கட்டண உயர்வு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
2001ஆம் ஆண்டிற்குக் பிறகு தற்பொழுதுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. கடந்த 5 ஆண்டு காலத்தில் பல ரக பேருந்துகளை அறிமுகப்படுத்தி பல விதங்களில் கட்டணங்களை சத்தமில்லாமல் திமுக அரசு உயர்த்தியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
சொகுசு பேருந்து கட்டணம் கிலோமீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கட்டணம் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும், உயர்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்தளப்பேருந்து, அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பஸ்களில் கட்டணம் இனி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதுபோன்ற பேருந்துகளில் பயணம் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் சாதாரண பேருந்துகளை விட தற்போது சொகுசுப்பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த கட்டண உயர்வினால் வாங்கும் கூலியை பேருந்து கட்டணத்திற்கு கொடுக்கவே சரியாகிவிடும் என்கின்றனர் கூலித் தெழிலாளர்கள்.
சென்னை நீங்களாக நகர பேருந்து கட்டணம் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை நகரில் சாதாரண பேருந்து, எல்.எஸ்.எஸ், சிட்டி எக்ஸ்பிரஸ், தாழ்தளப்பேருந்து என நான்கு வகை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பேருந்திலும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
சாதாரன நாட்களிலேயே கிராமப்புறங்களில் இருந்து மதுரைக்கு வந்து செல்பவர்கள் கண்டக்டர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு செல்வர். திடீரென்று உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வினால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அறிவித்த வயதானவர்கள் எங்கும் ஏறி எங்கும் இறங்கும் இலவச பஸ்பாஸ் திட்டம் அமலாகுமா? அல்லது கிடப்பில் போடப்படுமா? என்பதே அனைவரின் கேள்வி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக