தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.11

உயர் தொழில்நுட்பம் அமெரிக்காவை முந்தியது சீனா.

உயர் தொழில் நுட்பம் நிறைந்த புதுவகை கைத்தொலைபேசிகளை வாங்குவதில் சீனர்கள் அமெரிக்கர்களை முந்திச் சென்றுள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனர்கள் 24 மில்லியன் சிமாற் கைத்தொலைபேசிகளை வாங்கியுள்ளார்கள். சுமார் ஒரு வருட காலத்தில் 58 வீதம் விற்பனை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அமெரிக்கர்களை ஒப்பிட்டால் 23.3 மில்லியன் தொலைபேசிகளையே இக்காலப்பகுதியில் வாங்கியுள்ளனர். இது வெறும் ஏழு வீத அதிகரிப்பாகும். பின்லாந்து நாட்டில் தயாராகும் நொக்கியா
சீன சந்தையில் அதிகமாக விற்கப்பட்டுள்ளது. இத்தொலைபேசிகள் 28 வீத விற்பனையை தொட்டுள்ளன, அதேவேளை தென்கொரியாவின் சம்சூங் 17 வீதம் ம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தைவானில் தயாராகும் எச்.ரி.சி தொலைபேசிகள் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகியுள்ளன. ஆப்பிளின் ஐ போன் 20 வீத விற்பனையை தொட்டுள்ளது. நவீன கருவிகளை சீனர்கள் வேகமாக வாங்க வாங்க அந்தச் சமுதாயமும் வேகமாக முன்னேறும் என்பது தெரிந்ததே.

0 கருத்துகள்: