தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.11.11

சர்வதேச போராளிகளில் இரு தலைவர்கள் மட்டும் உயிருடன்

கடந்த 2001ம் ஆண்டு செப். 11ம் திகதி அமெரிக்காவால் வெளியிடப்பட்ட அல் குவைதா அமைப்பின் முக்கிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் மேலும் இரண்டே இரண்டு தலைவர்கள் மட்டும் உயிருடன் எஞ்சியுள்ளார்கள், மற்றைய அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ அறிவித்துள்ளது. அய்மான் அல் ஜவாகிரி, அபு ஜகாயா அல் லபி ஆகிய இருவருமே மீதமாக
இருக்கிறார்கள். பட்டியலிடப்பட்ட போராளிகளின் தொகை குறைவடைந்து செல்வதோடு அல் குவைதாவின் பலமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதுவரை பாகிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரிகள் இப்போது ஏமன் நாடு நோக்கி யாகை கட்டத் தொடங்கியுள்ளார்கள். ஏமனின் தென் பகுதியில் அல் குவைதாவின் தாக்குதல்கள் பரவலாக நடைபெறுவதால் இப்பகுதிக்கு விரைந்துள்ளார்கள். ஒஸாமா பின்லேடனுக்குப் பின்னர் அல் குவைதா தலைமையை அய்மான் அல் ஜவாகிரி, தலைமை ஏற்றுள்ளார். ஆனால் இவரைவிட மிகுந்த ஆற்றல் மிக்க தலைவராக அபு ஜகாயா அல் லபி இருப்பதாகவும் சி.ஐ.ஏ தெரிவிக்கிறது. கடந்த சில காலமாக அமெரிக்கர்கள் வேகமாக பயங்கரவாத பட்டியலில் உள்ள அல் குவைதா தலைவர்களை அகற்றியுள்ளனர். தொடர்ந்தும் அல் குவைதா முன்னரைப் போல வளர முடியாதளவு கட்டுப்பாட்டை அமெரிக்க உளவுப்பிரிவு செலுத்துவதாகவும் இன்றைய வாசிங்டன் போஸ்ட் கூறுகிறது. தற்போதைய நிலையில் எஞ்சியுள்ள இரு தலைவர்களாலும் அல் குவைதாவை சிறப்பாக முன்னெடுக்க முடியாது என்றும் அது கூறுகிறது.

0 கருத்துகள்: