தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.11

குவைத்தில் கட்டப்படவுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி படங்கள்

குவைத் நாட்டில் கட்டப்படவிருக்கும் புதிய சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி வடிவமைப்பை லண்டனை தளமாக கொண்ட Foster + Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வருடம் தோறும், சுமார் 13 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க கூடிய வகையில் கட்டப்படவுள்ள இவ்விமான நிலையம், Dparture, Arrival, and Baggage என மூன்று பிரதான பிரிவுகளை கொண்டதாகவும், சுற்றுலா

பயணிகள் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய வகையில், எளிமையான நுழைவு பகுதிகளை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இவ்விமான நிலையத்தின் சிறப்பு அம்சமாக கூரையில் சோலார் பேனல்கள் செயற்படும் வகையில் கான்கிரீட் அமைப்பு உருவாக்கப்படவுள்ளதால், சூரிய ஒளி சக்தியை சேமித்துவைக்க கூடிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இயற்கைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் கட்டப்படும் உலகின் முதலாவது சர்வதேச பயணிகள் விமான நிலையமகாவும் இது அறியப்படுகிறது.

குவைத் நாட்டின் பாரம்பரிய 'தோவ்' பாய்மர படகுகளை குறிக்கும் வகையில் இவ்விமான நிலையம் பாய்மரங்களின் உருவமைப்பில் வடிவமைக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்: