தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.10.11

ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கலந்து கொண்டது. இதற்கு அவர் விளக்கம் அளிப்பாரா?-சல்மான் குர்ஷித்


வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லோக்பால் மசோதாவை வலுவான ஒன்றாக அறிமுகப்படுத்த அன்னா ஹசாரே முன் வைத்த மூன்று கோரிக்கைகளும் ஏறத்தாழ ஏற்கப்பட்டுள்ளனது. அதன்படி லோக் ஆயுக்தா மசோதா மாநிலங்கள் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஏற்கெனவே மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் அதிகலவில் கலந்து கொண்டதாக மோகன் பகவத் கூறியுள்ளார். இதற்கு
அன்னா ஹசாரே  விளக்கம் அளிப்பாரா? ஊழல் எதிர்ப்பு எனும் பெயரில் அவர் காங்கிரஸ் எதிர்ப்பைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அன்னா ஹசாரே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களியுங்கள் எனக்கூறியுள்ளார். இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அவரது பிரச்சார சிடியை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

ஆனால் இது ஒன்றேபோதும் அவர் நடுநிலையைப் புரிந்து கொள்ள. ஆனால் அதற்காக காங்கிரஸ் தன் வாக்கிலிருந்து பின்வாங்காது. லோக்பால் அறிமுகம் செய்யப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.

0 கருத்துகள்: