தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.9.11

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆல் இந்தியா மில்லி குழுவுக்கு மம்தா உத்திரவாதம்


14sanat9
கொல்கத்தா:முஸ்லிம்களின் பிரச்சினைகளை சரி செய்யக் கோரி, கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி  மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலை சேர்ந்த குழு தலைவர்கள் சந்தித்தனர்.
மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றப் பின் முதல் முறையாக முஸ்லிம்கள் அடங்கிய குழுவை சந்திக்கிறார், மேலும் அவர்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள் கல்வி, இட ஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்பு பற்றியாகும்.

வேலைவாய்ப்பு: இரண்டரைக் கோடிக்கும் மேலான மக்கள் தொகையில் 27.25% மக்கள் தொகை மேற்கு வங்களாத்தில் உள்ளனர். ஆனால் 2-3% மக்கள் மட்டுமே அரசாங்கத் துறையில் பணியில் உள்ளனர். அதிக படிப்பு தேவைப்படாத ஜி4 ஊழியர்களின் பணிக்கு கூட முஸ்லிம் மக்கள்  அமர்த்தபடுவதில்லை என்றும், மற்ற சிறுபான்மை மக்களை விட முஸ்லிம் மக்கள் பிற்படுத்தப் பட்ட நிலையிலேயே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு: சச்சார் கமிட்டியின் அறிக்கைப் படி முஸ்லிம் மக்களுக்கு சமஉரிமை வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் இடது முன்னணி அரசாங்கம் 10% இட ஒத்துக்கீட்டை ஒ.பி.சி முஸ்லிம்களுக்கு அளித்துள்ளது. அது தகுந்த முறையில்அனைத்து துறையிலும் பயன்படுத்தப்படுகிறது என்றால், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் உயர் பதவிகளான துணை தலைவர் மற்றும் சார்பு துணைத் தலைவர்,மாநில பலகலைகழகங்களில் உள்ள அதிகாரிகளின் பணிகளுக்கு மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கும் முஸ்லிம் மக்கள் எந்த வித பாகுபாடும் இன்றி பரிந்துரைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கல்வி: சச்சார் கமிட்டி அறிக்கையின் படி 1161  கிராமங்கள் கல்வி கற்க பள்ளிகள் இல்லாமல் உள்ளது. இந்த அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக பள்ளிகள் அமைத்து தர வேண்டும் என்றும், மேலும் அரசாங்கம், சிறுபான்மை வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவர்களின் மாவட்டத்திலேயே பள்ளிகள் அமைத்தும், மேலும் அலியா பல்கலைகழகத்தில் அனைத்துத் துறைகளும் அமைக்கப்பட வேண்டும் என்றும், கல்கத்தாவில் உருது பள்ளிக் கூடங்கள் அதிகரிக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளில் தெரிவித்து இருந்தனர்.
மேலும் ராஜரட், டைமண்ட் ஹார்பர், கோனா எக்ஸ்பிரஸ் மற்றும் எல்.ஐ.ஜி மற்றும் எம்.ஐ.கி மனைகளில் முஸ்லிம் சமதாயம் அமர்த்தப்பட வேண்டும் என்றும், மாநிலத்திற்குத் தனித்த அமைச்சர் அமைக்கப்பட்டால் தங்கள் குறைகளை எளிதில் சேர்க்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் முதலமைச்சர் மம்தா, அவரது அமைச்சர் நூருல் ஹக்கின் செயலாளரை சந்திக்கும் படியும், மேலும் மாநில அமைச்சர் ஜாவித் அஹ்மத் கான் உங்கள் கோரிக்கைகள் பற்றி கையாள்வர் என்றும், தேர்தல் காரணமாக என்னால் எந்த வித முடிவும் எடுக்க இயலாது என்றும், ஆனால் உங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் வெகு விரைவில் சரிசெய்யப்படும் என்றும் உத்திரவாதம் கொடுத்தார்.

0 கருத்துகள்: