நேபாள் - இந்திய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் பிரதேசத்தில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 6.8 ரிக்டர் அளவில் இப்பூகம் தாக்கியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்குள்ள
பிரிட்டிஷ் தூதரக சுவர் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கிழக்கு நேபாள் எல்லைப்பகுதிகளான சிக்கிம், தப்லெஜுங், தலைநர் காத்மண்டு மற்றும் வங்க தேச தலைநகர் டாக்காவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்தியாவின் டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில்தான் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்ட்டது.
பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.
வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.
உள்ளூர் நேரம் மாலை 6.25 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் 40 செக்கன்களுக்கு மேலாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சப்கோதாவில் 24 தடவைகள் மீண்டும் மீண்டும் சிறிய சிறிய நிலநடுகங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அப்பகுதிகளுக்கு இந்திய இராணுவத்தினர் விரைந்துள்ளதுடன், விமானப்படையின் ஐந்து விமானங்களும் அங்கு விரைந்துள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
77 வருடங்களுக்கு பிறகு நேபாளை தாக்கியுள்ள கடுமையான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இறுதியாக 1934ம் ஆண்டில் 8.4 ரிக்டர் அளவில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 7000 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக