தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.11

பஹ்ரைன்:எதிர்ப்பாளர்களுடன்மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா பேச்சுவார்த்தை


a9af0_story.khalifa.mar12.dod
மனாமா:அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ள பஹ்ரைனில் அரசுக்கு எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.அல்விஃபாக் உள்பட முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் அனைத்து பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்வோம் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல்கலீஃபா அறிவித்துள்ளார். நேற்று நடந்த
பேச்சுவார்த்தையின் துவக்கத்தை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது.
பல வாரங்களாக பஹ்ரைனில் நடந்த போராட்டத்தில் 30 பேர் கொல்லப்பட்டிருந்தனர். எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உள்பட பல உறுப்பினர்களையும் அரசு சிறையில் அடைத்தது. பிரதிநிதிகள் முன்வைக்கும் விஷயங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை அமையும். நிபந்தனைகளோ, அளவுகோல்களோ இல்லை என பாராளுமன்ற சபாநாயகர் கலீஃபா தஹ்ரானி தெரிவித்துள்ளார். அரசியல் பிரச்சனைக்கு ஒன்றிணைவோம் என்ற லட்சியத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இதற்கிடையே பாதுகாப்பு சட்டத்தின்படி கைதுச்செய்யப்பட்ட நூற்றிற்கும் அதிகமானோரை அரசு விடுதலைச்செய்தது.

0 கருத்துகள்: