தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.11

அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக கொண்டு வளரும் இம்ரான் கான்


On hunger strike ... Imran Khan.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் உலகிலிருந்து அரசியல் பிட்சில் களம் மாறிய இம்ரான் கான் வாய்ப்புகளை பயன்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்துவருகிறார்.
பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி பதுங்கும் வேளையில் இம்ரான் கான் அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக்குகிறார்.15 ஆண்டுகளுக்கு
முன்பு தெஹ்ரீக்-இ-இன்ஸாப்(நீதிக்கான இயக்கம்) என்ற கட்சியை துவக்கி அரசியலில் நுழைந்த இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில், அதிகாரத்தின் தாழ்வாரங்களில் கோழைத்தனத்திலிருந்து விடுதலைப்பெறுவதுதான் நாட்டிற்கு தேவை என ஆணையிட்டு கூறுகிறார். நாட்டில் தொழில்சார்ந்த நிபுணர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் மத்தியில் இம்ரான்கானுக்கு செல்வாக்கு அதிகரித்துவருகிறது.
மக்கள் ஆதரவுப்பெற்ற அரசியல்வாதி என்ற கருத்துக்கணிப்பில் இம்ரான்கானுக்கு 68 சதவீத மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.கடந்த ஆண்டு இம்ரான் கானுக்கு 52 சதவீத ஆதரவே இருந்தது.அல்காயிதா தலைவராக கருதப்படும் உஸாமாவின் படுகொலை, பாகிஸ்தானியர்களை கொலைச்செய்த சி.ஐ.ஏ ஏஜண்டின் விடுதலை, பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அமெரிக்காவின் விமானத்தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராக இம்ரான் கான் எழுப்பு குரல் அவருக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கச்செய்வதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் அடாவடி ஆளில்லா விமானத்தாக்குதல்களுக்கு எதிராக இம்ரான்கான் நடத்திய போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கலந்துக்கொண்டது ஆளுங்கட்சியான பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியையும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ் ஷெரீஃப் பிரிவு) அதிர்ச்சியடையச்செய்துள்ளது. ஆப்கானில் நேட்டோ ராணுவத்திற்கு தேவையான பொருட்களை அனுப்புவதை தடுக்கவேண்டும் என இம்ரான்கான் கோரிக்கை விடுக்கிறார்.இம்ரானின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்துவருவதாக இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரி நேற்று முன்தினம்ஒப்புக்கொண்டார்.இம்ரான் கானின் அமெரிக்க எதிர்ப்பு அறிக்கைகள் கல்வியாளர்கள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கும்வரை ஒருவர் நிரபராதி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால், சட்டத்தை கையில் எடுத்து ஒரு நாட்டின் எல்லையில் அத்துமீறி பிறரை கொலைச்செய்பவன்தாம் பயங்கரவாதி-அமெரிக்க ராணுவத்தை விமர்சித்து பெஷாவரில் இம்ரான் கான் உரையாற்றுகிறார்.இம்ரான்கானின் கூட்டத்தில் அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கின்றனர் என ஹெரால்ட் மாத இதழின் ஆசிரியர் பத்ர் ஸலாம் கூறுகிறார்.பாரம்பரிய அரசியலுக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்துங்கள் என்ற செய்தியை இளைஞர்களுக்கு இம்ரான்கான் வழங்குகிறார். ஊழல் தொடர்கதையான பாகிஸ்தானில் இம்ரான் கான் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
1996-ஆம் ஆண்டு தனது தாயாரின் நினைவாக கட்டிய ஷவ்கத் கானம் மருத்துவமனை பாகிஸ்தானில் பிரபல புற்றுநோய் சிகிட்சை மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.கடந்த ஆண்டு பாகிஸ்தானை துயரத்தில் ஆழ்த்திய வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வந்தவர்களில் இம்ரான்கானும் அடங்குவார்.தனது சொந்த ஊரான மெய்ன்வாலியில் இம்ரான்கான் கல்லூரியை நிறுவியுள்ளார்.
இம்ரான் கான் ஆபத்தான நபர் என கூறும் அமெரிக்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

0 கருத்துகள்: