தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.7.11

தாய்லாந்து தேர்தல் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி மகத்தான வெற்றி!


கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் அதன் எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி கடும் போட்டிக்கு மத்தியில், நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.

யிங்லக் ஷினவட்ரா (44), பியூ தாய் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்பதன் மூலம், அவரது அண்ணனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியில் அதிர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எதிர்த்துப் போட்டியிட்ட பிரதமர் அபிசிட் விஜ்ஜாஜிவா, முதலாவது பெண் பிரதமராக பதவியேற்ற யிங்லக்கிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர், “தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிய நிலையில் பியூ தாய் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனக்கூறி, பியூ தாய் கட்சிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
கிளர்ச்சிமிக்க பெருந்திரளான ஆதரவாளர்களைத் தாம் கொண்டிருந்ததோடு, பெரும்பான்மையை உறுதி செய்து கொள்வதற்காக சிறு கட்சிகளுடனான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருந்ததாக யிங்லக் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது வெற்றிக்கு வாக்காளர்கள் மாத்திரமே காரணமல்ல எனவும், ஷினவட்ரா பரம்பரையின் அங்கத்தவராகத் தாம் விளங்கியமையும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

0 கருத்துகள்: