தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.6.11

சேனல்-4 தொலைக்காட்சியின் இலங்கைபோர்க்குற்ற ஆவண விவரணம் - ஐ.நா.வில் 3ந் திகதி திரையிடப்படுகிறது.


ஶ்ரீலங்காவில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிச் சமரில், அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான  ஆவணங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி,
இதுவரையில் வெளியிட்டுள்ள ஆவணங்களுடன் வெளியிடப்படாத மேலும் சில காட்சிகளையும் இணைத்து, ஆவணப்படமாக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.  சுமார் ஒரு மணி நேரம் கொண்ட  இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு
விவரணப்படம், வரும் 3ம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்,  ஜெனீவாவில் உள்ள U .N அலுவலகத்தில் இத் திரைப்படம் ஜூன் 3 , 11 .00 மணிக்கு Room XXII (22) திரையிடப்படும்எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவரணத் தொகுப்பில், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச் சாட்சியங்கள் என;பனவும் இதில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.  வரும் 14ம் திகதி இரவு 11.05 க்கு சனல்-4 தொலைக்காட்சியிலும், இந்த விவரணம் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் அனைத்தும் உண்மையானவை,  நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் தெரிவித்திருக்கும் நிலையில்,  இந்த விவரணம், ஶ்ரீலங்கா அரசுக்கு சர்வதேச அரங்கில், மேலும் நெருக்கடிகளை உருவாக்கலாம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.  இதேவேளை சனல் - 4 தொலைக்காட்சியின் போர்க்குற்ற ஆதாரங்கள்   போலியானவை என  இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: