தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.11

அருணாச்சல பிரதேச முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிப்பு : மூன்று சடலங்கள் மீட்பு!


அருணாச்சல் பிரதேச முதல்வருடன் மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் மற்றும் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தகவல் வெளியிட்டார்.
ஐந்து நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு, இன்று காலை தவாங்
மாவட்டத்தில் உள்ள லபோதாங்க் என்ற இடத்தில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் இவை சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளதாக, ப.சிதம்பரம் தெரிவித்தார்.


4900 மீற்றர் உயரத்தில் உள்ள குறித்த லகுதாங் எனும் குறித்த இடம்,  இஸ்ரோ வழங்கிய செய்மதி படங்களை அடிப்படையாக கொண்டு, கண்ட்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியிருந்த நிலையில் தற்போது குறித்த விபத்தில் டோர்ஜி காந்துவும் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உடலங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தலை மேற்கொள்ள பிரத்தியேக மருத்துவ குழு ஒன்று சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார், 3000 பாதுகாப்பு படையினர், 10,000 பொதுமக்கள், இந்திய - பூட்டான் இராணுவ ஹெலிகாப்டர்கள், யுத்த விமானங்கள் என கடந்த ஐந்து நாள் தீவிர தேடுதல் இடம்பெற்றது. இவற்ரை விட,  ஜோர்ஜி காந்துவின் மகனான டாஷி டெசெரிங் காந்துவும்  100 பேர் கொண்ட தனிப்படையுடன் கால்நடையாக தேடுதலில் இறங்கியிருந்தார்.

0 கருத்துகள்: