தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.11

பின்லேடனின் பழைய புகைப்படம்


பாகிஸ்தானில் அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி இணையதளங்களில் வெளியான உடன் டிவிட்டர், பேஸ்புக் இணையதளங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பின்லேடனின் உடல் இருந்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் பின்லேடனின் முகத்தில் ரத்தக்கறைகள் இருந்தன.

எனினும் அந்த புகைப்படம் போலியானது என்பதை பின்லேடனின் பழைய புகைப்படம் ஒன்று நிரூபித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
எனவே பின்லேடன் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் என்ன என்று தற்போது சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா வரை பின்லேடனின் மரணத்தில் சந்தேகம் உள்ளவர்கள் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவில்லை.
என்னுடைய கண்களால் நான் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது. சதாம் உசேனைப் போன்று அவரது உடலைப் பார்க்கும்வரை அதை நம்பமுடியாது என மேரிகிளேஜரவுட் என்பவர் தெரிவித்தார்.
நியுயார்க் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர் இடிபாடுகளை அகற்ற உதவிய தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் மகனான எரிக் சோலோசிர் என்பவர் கூறுகையில், பின்லேடனின் மரணம் அவருக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அதை விரும்புவார் எனக் கருதினேன். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை என்றார்.
அவர்கள் விடியோவை அளித்திருக்க வேண்டும். அது கொடூரமாக இருந்தாலும் நாம் பார்த்து நம்ப முடியும் என அவர் கூறினார்.
பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் சீனியர் ஒருவர், பின்லேடனின் மரணம் அல் காய்தாவுக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை நம்புவதற்கு கடினமாக உள்ளது என்றார்.
எனினும் பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது 99.9 சதவீதம் நிச்சயமானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்லேடனின் டிஎன்ஏ டெஸ்ட் அவரது உறவினர்கள் பலரது டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது என அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிகவும் கொடூரமாக இருப்பதால்தான் பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் வெளியிடப்படவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன. சதாம் உசேன் மகன்கள் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில மாற்றங்கள் செய்து அமெரிக்க அரசு வெளியிட்டது. அதுபோல் இப்போதும் மாற்றப்பட்ட வடிவத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
பின்லேடன் மரணம் தொடர்பான காட்சிகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அதைப் பார்த்தால் மட்டுமே அவரது மரணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும் என்பதில் சந்தேகம் இல்லை

0 கருத்துகள்: